போலி மக்களாட்சியும் போலி பொதுவுடமையும்
மக்களாட்சி என்ற அமைப்பு நம் இந்திய நாட்டிற்கு புதியது. சொல்லபோனால் இன்னும் ஒரு நூற்றாண்டு கூட ஆகவில்லை. அதற்குமுன் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான வருஷங்கள் மன்னராட்சிதான் இங்கே நடைபெற்று வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கென்ன இப்போது என்கிறீர்களா? இந்த நாட்டில் இன்னமும் உண்மையான மக்களாட்சி மலராததற்கு மேற்சொன்ன கூற்றுக்கள் அடிப்படை. ஆண்டாண்டு காலமாய் அடிமைவாழ்க்கை வாழ்ந்து பழகிவிட்ட நம் முன்னோர்களும் சரி, இன்றைக்கு அல்லக்கைகளாய் ஆடம்பர வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளும் சரி, சமதர்மம் என்பதை சற்றும் அறியாதவர்கலாகவே இருப்பது நம் சாபக்கேடு!
அது என்ன உண்மையான மக்களாட்சி ? உண்மையான மக்களாட்சி என்றால் மக்கள் தங்களை தாங்களே ஆள வேண்டும். கோடிக்கணக்கில் இருக்கும் மக்கள் எப்படி தங்களை தாங்களே ஆள முடியும்? அதற்குத்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இப்ப, ஒரு வகுப்பில் உள்ள பெரும்பான்மையான மாணவர்கள் லீவு கேட்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். எல்லோரும் போடும் கோஷத்தை பார்த்த வகுப்பாசிரியர் "நீங்கள் தலைமையாசிரியரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் " என்று சொல்லிவிடுவார். அப்ப , வகுப்பு மாணவர் தலைவன் தனியாகவோ, துணைக்கு நாலு பேரை அழைத்துக் கொண்டோ தலைமை ஆசிரியரிடம் சென்று லீவுக்கான காரணத்தை எடுத்து சொல்வான். ஆக, இப்படி நிர்வகிக்கும் பொறுப்பை எல்லோரும் செய்யாமல் ஒரு சிலர் மட்டும் செய்வது சமூக கட்டமைப்பின் விதி.
இத்தகைய சமூக கட்டமைப்பு மனித இனம் மட்டுமின்றி, மற்ற பல விலங்கின குழுக்களிலும் காணப்படுகிறது. இதைத்தான் தனிமரம் தோப்பாகாது என்றும், மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்றும் சொல்வார்கள். எனவே சமுதாயம் என்பது பலதரப்பட்ட மனிதர்கள் ஒன்றுகூடி வாழ்வதே என்ற உண்மை புரியவேண்டும். அந்த அமைப்பு சரியாகவும், திறம்படவும் செயல்பட ஒரு அமைப்புமுறை வேண்டும், அதிகாரமுறை வேண்டும். சிறுவயதில் தேனீ க்களை பற்றி படித்து இருப்போம். வேலைக்கார தேனீக்கள் பூக்களில் உள்ள தேனை சேகரிக்கும், சில கூட்டை கட்டும் . ராணி தேனீ வருங்கால சந்த்ததிகளை உருவாக்கும். அவை அவை அதற்க்கான வேலையை செய்யும். அதுபோல நம் மனித சமூகமும் சரியாக இயங்கினால் பிரச்சனை இல்லை. தேனீக்களை ஒப்பிடும்போது, மனிதர்கள் பலதரப்பட்டவர்கள், பலதிறம் பெற்றவர்கள். எனவே மனித சமுதாயத்திற்கென்று ஒரு கட்டமைப்பு தேவைப் படுகிறது. அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிகார அமைப்பும், அதனால் ஏற்படும் வர்க்க பேதமும் தவிர்க்க இயலாதவை. அதுமட்டுமல்ல, எல்லாரும் அந்த நிர்வாக அமைப்பில் நேரடியாய் பங்குபெறுவது என்பது நடைமுறை சாத்தியமற்றது.
சரி, எல்லோரும் நிர்வாகத்தில் நேரடியாக பங்கு பெற விழைந்தால் என்ன ஆகும்? சமுதாயத்தின் மற்ற வேலைகளை யார் பார்ப்பது? நம் உடம்பை எடுத்துக் கொள்வோம். ஓவ்வொரு உறுப்பும் முக்கியமானதே, ஆனால் மூளை மற்ற உறுப்பக்களை கண்காணிக்கிறது, இயக்குகிறது, ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் நிர்வகிக்கிறது. அதற்காக இதயமோ, கையோ, காலோ கடுப்பாகி நானும் நிர்வாகத்தில் இறங்குகிறேன் பேர்வழி என்றால் எப்படி அவை தனது வேலையை செய்ய முடியும். சமுதாயம் என்ற உடலில் ஒவ்வொருவரும் தேவையே, ஆனால் அவர்தம் வேலையை விட்டுவிட்டு எல்லோரும் நிர்வாகம் என்று இறங்கினால் குழப்பம்தான்
மிஞ்சும். தவிர, நாம் உண்ண உணவோ, உடுக்க உடையோ கூட கிடைக்காது!
இனி மக்கள் பிரதிநிதிகள் பற்றி பார்ப்போம். விலங்குகள் உலகத்தில் பெரும்பான்மையானவை சர்வாதிகார தத்துவத்திலேயே இயங்குகின்றன. ஒரு விலங்கு கூட்டத்திற்கு வலிமையான , உருவில் பெரிய ஆண் விலங்கு தலைமை வகிக்கிறது. அதற்க்கு வயதாகிவிட்டாலோ, அதைவிட வலிமையான விலங்கு நம் தலைவனை சண்டையிட்டு ஜெயித்து விட்டாலோ அதன் ஆட்சி கோவிந்தா! பொதுவாக அந்த தலைமை விலங்கின் வாரிசு பெண்ணாகவோ, அல்லது ஆணாக இருந்தும் வலிமையற்றதாக இருப்பின் அது தலைமை பதவியை அடையமுடியாது. இந்த விலங்கின விதிகள் நம் மூதாதையாராக கருதப் படும் குரங்குகளுக்கு சால பொருந்தும்.
அந்த குரங்குகளில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதன் ஆடை உடுத்துவது என்று ஆரம்பித்து அரசியலில் வாரிசை வாழவைக்கும் அதிகார அமைப்புக்கும் வித்திட்டான். மனித குழுவில் எவன் ஒருவன் தைரியசாலியாகவும், புத்திசாலியாகவும் இருந்தானோ அவன் தலைவனாக்கப் பட்டான். அவன் தனக்கு பின் தனது முதல் மகனை தலைவனாக்கினான். அந்த மகன் தந்தையை போலவோ அல்லது அதற்க்கு மேலாகவோ தைரியசாலியாகவும், புத்திசாலியாகவும் இருக்கும் பட்சத்தில் தலைவன் பதவியை தக்கவைத்துகொண்டான். எப்போது அந்த வாரிசில் உள்ள ஒருவன் வலிமையற்றவனாக உள்ளானோ , அவனிடமிருந்து தலைவன் பதவி அவன் சொந்த மனிதர்களாலேயோ அல்லது மற்றொரு குழுவாலேயோ பிடுங்கபடுகிறது. நாளடைவில் நிர்வாகம் செய்ய தெரியாத கோழை அல்லது கொடுங்கோலன் - இதில் எந்த வகையாக இருப்பினும் அவன் வாரிசு அரசியல் நிலைத்ததில்லை என்பது வரலாறு. இன்று வரை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன, அவை அடையாளம் தெரியாதபடி அழிக்கப்பட்டும் இருக்கின்றன.

இனி நாம் இந்தியதிருநாட்டின் அரசியல் அதிகார அமைப்பு முறைக்தலைவனாக்கினான்.கு வருவோம். நீண்டநெடுங்காலம் மன்னராட்சி அமைப்பை பின்பற்றி வாழ்ந்த இந்த சமூகம் இன்றும் அதையே மக்களாட்சி என்ற பெயரில் பின்பற்றுகிறது என்பது நடைமுறை உண்மை. அறிவியலில் நியூட்டனின் மூன்றாம் விதி பற்றி தெரிந்த அளவுக்கு நம்மில் எத்தனை பேருக்கு முதல் விதி தெரியும். அது என்ன? "ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது." - இதுதான் அந்த விதி! மேலும் ஒரு பொருளின் மீது புற விசைகள் செயல்படாத வரை, அப்பொருளானது தன்னிச்சையாகத் தனது நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு நிலைமம் எனப்படும். இதை சமூக உளவியலுக்கு பயன்படுத்துவோம். அன்னியர் ஆதிக்கம் என்ற ஒன்று இல்லாதவரை , இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததே இல்லை, அதாவது ஒரே அரசனின் கீழ் இல்லை. இந்த நிலை முஸ்லிம் மன்னர்கள் இந்த பரந்த நிலப்பரப்பை ஒருகுடையின் கீழ் கொண்டு காரும்வரை நீடித்தது . அதுவே, ஆங்கிலேயருக்கு சாதகமாகவும் ஆனது. சொல்லபோனால், அவர்கள்தாம் இமயம் முதல் குமரி வரை உள்ள இந்த நாட்டை ஒரே ஆட்சி அமைப்பின்கீழ் கொண்டு வந்தது! அதுமட்டுமல்ல, மக்களாட்சித் தத்துவத்தையும் அவர்கள்தாம் இங்கே நேரடியாகவோ, மறைமுகமாகவோ விதைத்தார்கள்.
அதுவரை , ஒவ்வொரு வம்சத்தின் அல்லது ஒவ்வொரு மன்னனின் வாழ்நாளுக்குள்ளேயே ஆட்சியமைப்புகள் தங்கள் எல்லைகளை மாற்றின. இன்று ஒரு மன்னன் கீழ், பின் நாளை இன்னொரு மன்னன் கீழ் என்ற நிச்சயமற்ற நிலையிலேயே பெரும்பான்மையான மக்களும், அமைப்பினரும் என்பது உண்மை.