செவ்வாய், 8 அக்டோபர், 2013

ஒப்புதல் படிவம் - I

ஆய்வு தலைப்பு

மது சார்புள்ளமை கொண்ட நோயாளிகளின் வாழ்க்கை துணை மீது உள்ள உளவியல் தாக்கத்தை மதிப்பிடல்

அன்பார்ந்த பங்கேற்பாலர்களே,
நீங்கள் இந்த ஆய்வில் பங்கற்பதற்கு முன்பாக அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில் உங்களுக்கு இந்த ஆய்வு முறை மற்றும் நோக்கம் பற்றி தெரிந்து கொள்வது. இந்த ஆய்வு பற்றிய  எந்தவிதமான சந்தேகங்களுக்கும் நீங்கள் கீழ்கண்ட நபரை எந்நேரமும் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

இந்த ஆய்வின்  நோக்கம் என்ன?
மது சார்புள்ளமை கொண்ட நோயாளிகளின் வாழ்க்கை துணை மீது உள்ள உளவியல் தாக்கத்தை மதிப்பிடலும், மதுசார்புள்ளமையின் தீவிரத்திற்கும் அவர்தம் வாழ்க்கைத்துணையினரின் மனக்கவலை மற்றும் மனஅழுத்தம் இவற்றுக்கிடைபட்ட தொடர்பு குறித்த ஆய்வும் என் நோக்கங்கள்

உங்களை தேர்ந்தெடுக்க காரணம்?
உங்கள் கணவர் மதுசார்பு நோய்க்கு ஆட்பட்டுள்ளதால்

நீங்கள் கலந்து கொள்ளவேண்டிய நோக்கம் ?
இந்த ஆய்வில் பங்கேற்பது முற்றிலும் உங்களது இஷ்டம். உங்களுக்கு விருப்பம் இல்லை  என்றால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த ஆய்விலிருந்து விலகி கொள்ளலாம். விலகுவதால் உங்களுக்கு கொடுக்கபடும் சிகிச்சையில் எந்த மாற்றமும் ஏற்படாது .

நீங்கள் பங்கேற்பதால் நிகழ்வது என்ன ?
நான் உங்களிடம் உங்கள் கணவரின் மதுசார்புநிலை குறித்தும் , உங்கள் மனநிலை சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பி குறித்து கொள்வேன் .

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ?
உங்களது தினசரி அலுவல்களில் எந்த விதமான மாற்றமும் ஏற்படாது . இந்த ஆய்வில் ஒரு சில கேள்வி தொகுப்புகளுக்கு பதில் சொல்வது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது.

சோதனை நடைமுறை அல்லது மருந்து பரிசோதனை என்ன ?
நீங்கள் இந்த ஆய்விற்கென பிரத்தியேகமான சோதனைகளோ மருந்துகளோ எடுத்துகொள்ள தேவை இல்லை. மனநிலை சார்ந்த  அறிகுறிகள் மற்றும்  தொடர்பான தரவு மட்டும்   சேகரிக்கப்படும் .

இதில் பங்கேற்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன ?
இந்த ஆய்வில் உங்கள் சமூக குறியீடுகள் விவரம் , உங்கள் கணவரின் மதுசார்புத்தன்மை , மற்றும் உங்களுக்கு ஏற்பட்டுள்ள உளவியல் பிரச்சனைகள்  இவற்றுக்கிடைபட்ட தொடர்பு  பற்றி அறிந்து கொள்ள  முடியும். அதன் மூலம் , மதுவால்  வாழ்க்கைத்துணைவர்களுக்கு   வரும் மனக்கவலை, மன அழுத்தம் பற்றி மேலும் அறிந்து கொள்ள  எங்களுக்கு உதவும்.


புதிய தகவல் கிடைக்கும் பட்சத்தில் ?
ஆய்வின்போதோ  அல்லது அதன் பின்னரோ  புதிய தகவல் கிடைக்கபட்டால், அது உங்களுக்கு உபயோகம்மாக இருப்பின் அத்தகவல்கள் உங்களுக்கு தரப்படும் .

நீங்கள் இந்த ஆய்வில் பங்கேற்பது  ரகசியமாக வைக்கப்படுமா ?
நீங்கள் எனக்கு கொடுத்த  அனைத்து தகவல்களும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே  பயன்படுத்தப்படும். கிடைக்கும் தகவல்கள்  மின்னணு குறியிடப்பட்டு   சேமிக்கப்படும்.தகவல்களும், தரவுகளும்  ரகசியமாக கணினியில் பாதுகாப்புடன் வைக்கப்படும்.

இந்த ஆய்வின் முடிவு என்ன ?
இந்த ஆய்வின் முடிவுகள் பல்வேறு கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும். மேலும் இந்த ஆய்வு முடிவுகள் எனது முதுநிலை மருத்துவ  படிப்பிற்கான ஆய்வாக வைக்கப்படும்

இந்த ஆய்வினை நடத்துபவர்  யார் ?
மன நலத்துறை , ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை. புதுச்சேரி .

இந்த ஆய்வினை பரிசோதிக்கும் வல்லுனர்கள் யார் ?
இந்த ஆய்வினை பரிசோதித்து  அங்கீகரிப்பது நிலைய நன்னெறிக் குழு , ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை. புதுச்சேரி .

மேலும் விவரங்களுக்கு தொடர்கொள்ள  :
உங்களுக்கு ஏதினும் சந்தேகம்  இருந்தால் அல்லது ஆய்வு தொடர்பான மேலும்  விளக்கம் தேவையெனில் கீழ்கண்ட நபரை தொடர்பு  கொள்ளவும்.

தொடர்பு நபர்

மரு. மோ.ஹரி சுந்தர்
முதுகலை மருத்துவ மாணவர்,
மனநலத் துறை
ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை.
புதுச்சேரி .
அலைபேசி - 9941374328

இந்த ஆய்வில் பங்கேற்க ஒப்புதல் அளித்த உங்களுக்கு என் நன்றி சொல்ல விரும்புகிறேன்  .

தேதி                                                            ஆய்வாளரின்  கையொப்பம்
                                                                                        
இடம்                                                             பங்கேற்ப்பாலரின் கையொப்பம் /  இடதுகை பெருவிரல்ரேகை





ஒப்புதல் படிவம் II

பங்கேற்ப்பாலரின்  பெயர்

முகவரி




ஆய்வுத்தலைப்பு

 மது சார்புள்ளமை கொண்ட நோயாளிகளின் வாழ்க்கை துணை மீது உள்ள உளவியல் தாக்கத்தை மதிப்பிடல்

இந்த ஆய்வில் பங்கேற்பது  பற்றிய விவரங்கள் எனக்கு  தாய்மாழியில் எழுத்துபூர்வமாக விளக்கி தெரிவிக்கப்பட்டது . இந்த ஆய்வில் என் பங்கேற்பினை  எந்த நேரத்திலும் திரும்ப பெற்றுக்ககாள்ளலாம் என்பதையும் எந்த காரணமும் தெரிவிக்காமல் விலகிக்  கொள்ளலாம் என்பதையும் அறிவேன் . இந்த ஆய்வின் முடிவுகள் கல்வி மற்றும் அறிவியல் சம்பந்தமாக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை  அறிவேன் .இந்த ஆய்வுகளின் முடிவுகளை  மேற்கண்ட நோக்கங்களுக்கு  மட்டும் பயன் படுத்தி கொள்ளலாம்  என சம்மதிக்கிறேன்.இந்த ஆய்வின் ஒப்புதல் படிவத்தின் நகலை பெற்றுக் கொண்டேன் . இந்த ஆய்வில் கலந்து கொள்ள  முழு சம்மதம் தெரிவிக்கிறேன் .


பங்ககற்பாளர் கையொப்பம்      
                                                                                                   தேதி
இடதுகை பெருவிரல்ரேகை

சாட்சி கையொப்பம்                                                           தேதி
இடதுகை பெருவிரல்ரேகை

திங்கள், 7 அக்டோபர், 2013

ஒப்புதல்படிவம் - I

ஆய்வுதலைப்பு
மருத்துவத் துறையினரின் உணர்வுசார் நுண்ணறிவு திறன் மற்றும் அதன் காரணிகள்  

அன்பார்ந்த பங்கேற்பாலர்களே 
நீங்கள்இந்தஆய்வில்பங்கேற்பதற்குமுன்பாகஅறிந்துகொள்ளவேண்டியயாதெனில்உங்களுக்குஏதேனும்இந்தஆய்வில்பற்றிசந்தேகம்இருப்பின்நீங்கள்தாரளமாககீழ்கண்டநபருடன்தொடர்புகொள்ளலாம் .

இந்த ஆய்வின் நோக்கம்என்ன?
இந்த ஆய்வின் நோக்கம், மருத்துவத் துறையினரின் உணர்வுசார் நுண்ணறிவு திறன் மற்றும் அதன் காரணிகள்  
பற்றிய அளவீடும்  உணர்வுசார் நுண்ணறிவு திறனுக்கும் உள்ளார்ந்த மன அழுத்தத்திற்கும்  உள்ள தொடர்பும் குறித்த ஆய்வு. 

உங்களை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
உங்களை  தேர்ந்தெடுக்க  காரணம் நீங்கள் ஒரு மருத்துவத் துறைசார்ந்தவர்  என்பதால்.  

நீங்கள் கலந்து கொள்ளவேண்டிய நோக்கம் ?
இந்த ஆய்வில் பங்கேற்பது முற்றிலும் உங்களது இஷ்டம். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால்  எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த ஆய்விலிருந்து விலகிகொள்ளலாம்.  விலகுவதால் உங்களுக்கு கொடுக்கபடும் சிகிச்சையில் எந்தமாற்றமும் ஏற்படாது

நீங்கள் பங்கேற்பதனால்  நிகழ்வுவது என்ன ?
நான் உங்களிடம்  உணர்வுசார் நுண்ணறிவு திறன் பற்றிகேள்விகள் கேட்டறிவேன். அதோடு உள்ளார்ந்த மன அழுத்தம் குறித்த கேள்விதொகுப்பும் பதிவு செய்யப் படும்.

நீங்கள் செய்யவேண்டியது என்ன ?
உங்களது தினசரி நடவடிக்கைகளில் எந்தவிதமான மாற்றமும் தேவைபடாது. இந்தஆய்வில் ஒருசிலகேள்விகள் மட்டுமே,பதில் சொல்வது மட்டுமே நீங்கள்செய்யவேண்டியது.

எந்தநடைமுறை அல்லது மருந்து கொடுத்து பரிசோதிப்போம்?
நீங்கள் இந்த ஆய்வில் பங்கேற்பதனால்  எந்தவிதமான நடைமுறையும் மற்றும் மருந்துகளோ நீங்கள் எடுத்துகொள்ள தேவைஇல்லை.


இதில்  பங்கேற்பதனால் ஏற்படும் நன்மைகள் என்ன ?
உங்களது  உணர்வுசார் நுண்ணறிவு திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும், அதன்மூலம் , உள்ளார்ந்த மன அழுத்தம் மற்றும் அதை தடுக்கும் தகவமைப்புத்திறன் பற்றி அறிந்து கொள்ள இயலும் 

நீங்கள் இந்த ஆய்வில் பங்கேற்பது ரகசியமாக வைக்கப்படுமா ?
நீங்கள் கொடுக்கும் விவரங்கள் அனைத்தும் ஆய்விற்காக மட்டுமே பயன்படுத்தபடும். இந்தவிவரங்கள் அனைத்தும் ரகசியமாக கணினியில் பாதுகாப்புடன்வைக்கப்படும்.

இந்தஆய்வின்முடிவென்ன ?
இந்தஆய்வின்முடிவுகள்பல்வேறுகல்விபயன்படிற்குஇதேதலைப்பில்உள்ளபல்வேறுபயன்பாட்டிற்குபயன்படுத்தபடும். இந்தஆய்வின்முடிவுகள்எனதுஆய்வறிக்கைமூலம்சமர்பிக்கபடும்.
இந்தஆய்வினைநடத்துபவர்யார் ?
மனநலத்துறை , ஸ்ரீமணக்குளவிநாயகர் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை, புதுச்சேரி .